ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (14:57 IST)

ஜாடிக்குள் அடைக்கப்பட்ட மனித மூளை: வாகன சோதனையில் பகீர்!!

கனடாவில் ஜாடி ஒன்றிற்குள் அடைக்கப்பட்டிருந்த மனித மூளை கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் தபால்களுடன் நுழைந்த சரக்கு வாகனத்தை சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியபோது, ஜாடி ஒன்றிற்குள் அடைக்கப்பட்டிருந்த மனித மூளை கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவின் மிச்சிகன் மற்றும் கனடாவின் ஒண்டாரியோ மாகாணங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கடந்த வாரம் அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனை நடத்தியபோதே இது தெரியவந்தது. பழமையான கற்பித்தல் மாதிரி" என்று குறிப்பிடப்பட்ட பெட்டகம் ஒன்றினுள் இந்த மனித மூளை கண்டெடுக்கப்பட்டது.
 
"இதுபோன்ற மாதிரிகளை அமெரிக்காவிற்குள் சட்டப்பூர்வமாக எடுத்து வருவதற்கு தேவையான எவ்வித ஆவணமும் இல்லாமல், அந்த ஜாடிக்குள் மனித மூளை சர்வ சாதாரணமாக அடைக்கப்பட்டிருந்தது," என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 
 
அமெரிக்காவிற்குள் இதுபோன்ற வினோதமான விடயங்கள் கொண்டுவரப்படுவதும் அவை கண்டுபிடிக்கப்படுவதும் இது முதல் முறையல்ல.