வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (18:57 IST)

பறக்கும் விமான சக்கரத்தில் தீப் பொறி... அலறிய பயணிகள்... பரவலாகும் வீடியோ

கனடா நாட்டைச் சேர்ந்த விமானம் ஓடு பாதையில் இருந்து கிளம்பும்போது, அதன் டயர் ஒன்றில்  தீப் பொறி ஏற்பட்டு கழன்று விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டைச் சேர்ந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் என்ற விமானம் மோண்டிரியலில் இருந்து பொகோட்வில்லுக்கு கிளம்பிச் செல்ல ஒடுபாதையில் இருந்து புறப்படுகையில், அந்த விமானத்தில் சக்கரத்தில் இருந்து தீடிரென தீப் பொறி கிளம்பி, கீழே கழன்று விழந்தது.
 
விமாத்திற்குள் இருந்து அதை வீடியோ எடுத்த பயணிகள் அலறி கூச்சல் இட்டனர். இதனை அடுத்து விமானத்திலுள்ள எரிபொருள் தீருமளவு  வானில் இரண்டு மணி நேரம் வட்டமடித்து, அதன்பின் சேதாரத்துடன் பத்திரமாகத் தரை இறங்கியது.
 
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.