புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 14 மார்ச் 2019 (15:53 IST)

ஒரு நரியை கொல்ல ஒன்று சேர்ந்த 3,000 கோழிகள்

வட மேற்கு பிரான்சில் ஒரு பண்ணையில், கோழிகள் ஒன்று சேர்ந்து ஒரு நரியை கொன்றுவிட்டது.

பிரிட்டானியில் வழக்கத்துக்கு மாறாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஒரு இளம் நரி, கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் நுழைந்துள்ளது.

பொதுவாக மூவாயிரம் கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த பண்ணையின் கூண்டுக்குள் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

நரி உள்ளே நுழைந்தபிறகு கதவுகள் மூடிக்கொண்டன. கோழிகளிடம் சிக்கிய அந்த இளம் நரி அங்கே தனது உயிரைவிட்டது.

கோழிகளிடம் அப்போது ஏற்பட்ட கூட்டு மந்தையுணர்வால் அவை அந்த நரியை குத்திக் கொன்றிருக்கின்றன என்கிறார் கிராஸ் சீன் விவசாய பள்ளியின் துறை தலைவர் பாஸ்கல் டேனியல்.

அந்த நரியின் உடல் அடுத்தநாள் கோழிக் கூண்டு பகுதியின் மூலையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.