வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (13:25 IST)

பார்ட் பார்ட்டா நொறுக்கப்பட்ட பார் நாகராஜின் கடை: பொளந்துகட்டிய பொள்ளாச்சி மக்கள்

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் தொடர்புடைய பார் நாகராஜ் என்பவனின் கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி  பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள். இவ்வழக்கில் வசந்தகுமார், செந்தில், சதீஷ், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவன்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
 
இவ்வழக்கில் தொடர்புடைய பார் நாகராஜன் என்பவன் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரனை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் வெளியே வந்தான். இவன் பொள்ளாச்சியில் டாஸ்மாக் பார் ஒன்றை நடத்தி வருகிறான். பைனான்ஸ் தொழிலுடன், கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்தான். இந்த விவகாரத்தால் அதிமுகவில் இருந்த இவனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கியது கட்சி மேலிடம்.
 
இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த பார் நாகராஜன் மீது கடுமையான கோபம் கொண்ட பொள்ளாச்சி மக்கள், பார் நாகராஜன் நடத்தி வரும் பாரில் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.