ஞாயிறு, 8 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2016 (19:59 IST)

ஃபிஜி தீவு சூறாவளியில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு

ஃபிஜி தீவு சூறாவளியில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு
ஃபிஜி தீவைத் தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.


 

 
ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் அவசரகால முகாம்களில் தங்கியுள்ளனர்.
 
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகின்றது.
 
பின்தங்கிய பிரதேசங்களில் தொலைத்தொடர்பு இணைப்புகள் சரிசெய்யப்பட்டுவருகின்றன.
சடலங்களை பாதுகாத்து வைக்கும் வசதிகள் போதிய அளவில் இல்லாமையால், அவற்றை உடனடியாக புதைத்துவிடவோ அல்லது எரித்துவிடவோ வேண்டும் என்று உறவினர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
 
முக்கிய இடங்களில் மின்சார இணைப்புகள் மீள சரிசெய்யப்பட்டுள்ளன. ஆனால், பிணவறைகளுக்கு இன்னும் மின்சார இணைப்பு கிடைக்கவில்லை.