ஃபேஸ்புக் நிறுவனம்: '16 நாடுகள், 37 ஆயிரம் கிலோமீட்டர்' - மலைக்க வைக்கும் ஒரு முயற்சி

facebook
sinoj| Last Modified சனி, 16 மே 2020 (22:04 IST)
 

இணையவேகத்தை அதிகரிக்க ஃபேஸ்புக்கின் மலைக்க வைக்கும் முயற்சி
ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள 16 ஒரு முயற்சியில் ஃபேஸ்புக் நிறுவனம் இறங்கி உள்ளது. அதாவது அங்குள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து கடலுக்கு அடியில் 37,000 கி.மீ நீளத்துக்கு வடங்களைப் பதிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. ஆப்ரிக்காவில் உள்ள இளைய தலைமுறையினரிடம் ஃபேஸ்புக்கை எடுத்து செல்லும் முயற்சியாக இதை செய்கிறது அந்நிறுவனம். 2024ஆம் ஆண்டு இது பயன்பாட்டுக்கு வரும். சர்வதேச அளவில் சராசரியாக பத்தில் ஆறு பேருக்கு இணைய சேவை கிடைக்கும் போது, ஆப்ரிக்காவில் சராசரி பத்துக்கு நான்காக உள்ளது.


130 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த கண்டத்தில் தொழில்நுட்பம் சார்ந்த வணிகத்திற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆப்ரிக்காவையும், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் இந்த 2அ ஆப்ரிக்கா எனும் இந்த திட்டத்தின் மதிப்பு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.
 

இதில் மேலும் படிக்கவும் :