ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 26 செப்டம்பர் 2020 (09:57 IST)

கொரோனா வைரஸ்: `உயிரிழப்புகள் இரட்டிப்பாகும்` - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும்முன் உலகளவில் வைரஸ் தொற்றால் இருபது லட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார நிறுவனம்  எச்சரித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நிலைகளுக்கான தலைவர் மைக் ரேயான், உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.
 
இதுவரை உலகளவில் கொரோனா தொற்றால் பத்து லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 32மில்லியன் பேர் உலகளவில் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
குளிர்காலம் நெருங்குவதால் வட துருவ நாடுகள் பலவற்றில் கொரோனா தொற்றில் இரண்டாம் அலை தொடங்கியுள்ளது.
 
ஐரோப்பா முழுவதும் பல பகுதிகளில் மீண்டும் தொற்று பரவ தொடங்கியுள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
 
இதுவரை அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில்தான் அதிகம்பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
கொரோனா தொற்றுக்கான சிகிச்சை மேம்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளன. ஆனால் நல்ல சிகிச்சையோ அல்லது தடுப்பு மருந்துகளோ இருந்தாலும், இருபது லட்சம் பேர் உயிரிழப்பதை தடுக்க இயலாது என அவர் தெரிவித்தார்.