வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 16 ஜூலை 2020 (14:55 IST)

கொரோனா பரிசோதனை கருவி: உலகிலேயே மலிவான விலையில் தயாரித்த டெல்லி ஐஐடி

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

மலிவான கொரோனா பரிசோதனை கருவி - இந்து தமிழ் திசை

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்திருக்கிறது. வைரஸ் பரவலைக் கட்டுப் படுத்துவதற்காக, கொரோனா நோயாளிகளை விரைவில் கண்ட றிந்து அவர்களை தனிமைப்படுத் தும் நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.


இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது (ஐஐடி), கொரோனா வைரஸ் தொற்றை துல்லியமாக கண்டறியும் பரிசோதனைக் கருவியை அண்மையில் தயாரித்தது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

ஆர்.டி. பிசிஆர் முறை அடிப்படையில் தயாரிக்கப்பட் டுள்ள இந்த சோதனைக் கருவி தான் உலகிலேயே மிக விலை மலிவான கொரோனா சோதனைக் கருவியாக கருதப்படுகிறது. இதன் விலை ரூ.650-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவியை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே ஆகியோர் நேற்று அறிமுகம் செய்து வைத்தனர். 'நியூ டெக் மெடிக்கல்' நிறுவனத்தால் 'க்ரோ ஷுர்' (crosure) என்ற பெயரில் இந்தக் கருவி விற்பனைக்கு வந்துள்ளது.

இதன் மூலம் ஒரு மாதத் துக்கு இனி 20 லட்சம் பேருக்கு வைரஸ் பரிசோதனை செய்ய முடியும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என மேலும் விவரிக்கிறது அச்செய்தி.

ஆன்லைனில் பொறியியல் கலந்தாய்வு - தினத்தந்தி

என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார் என்கிறது தினத்தந்தியின் செய்தி.

2019-20-ம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலம் ஆன்லைன் வாயிலாக நடத்திமுடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த கல்வியாண்டும் (2020-21-ம் ஆண்டு) மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.

அந்த வகையில் 2020-21-ம் கல்வியாண்டில் என்ஜினீயரிங் படிப்பில் சேர இன்று (நேற்று) மாலை 6 மணி முதல் www.tne-a-o-n-l-i-ne.org, www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந்தேதி ஆகும்.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அக்டோபர் 15-ந்தேதிக்குள் என்ஜினீயரிங் கலந்தாய்வை முடிக்க அறிவுறுத்தி இருக்கிறது. அதற்குள் கலந்தாய்வை முடிக்க நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். அதன்படி, அசல் சான்றிதழை வருகிற 31-ந்தேதி முதல் அடுத்த மாதம் 20-ந்தேதி வரையில் பதிவேற்றம் செய்யலாம். ரேண்டம் எண் அடுத்த மாதம் 21-ந்தேதியும், தரவரிசை பட்டியல் செப்டம்பர் 7-ந்தேதியும் வெளியிடப்படும். சேவை மையம் வாயிலாக அசல் சான்றிதழை அடுத்த மாதம் 24-ந்தேதி முதல் செப்டம்பர் 1-ந்தேதி வரை சரிபார்த்துக்கொள்ளலாம்.

சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையிலும், பொதுப்பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 17-ந்தேதி முதல் அக்டோபர் 6-ந்தேதி வரையிலும், துணை கலந்தாய்வு அக்டோபர் 8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரையிலும், எஸ்.சி.ஏ., எஸ்.சி. பிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 14 மற்றும் 15-ந்தேதிக்குள்ளும் நடைபெறும். கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாகவே நடக்க உள்ளது என விவரிக்கிறது அச்செய்தி.

"10 நாட்களுக்குள் கொரோனா குறையும்" - தமிழக முதல்வர்

சென்னையில் தற்போது கொரோனா தக்கம் மெல்ல குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் பத்து நாட்களில் குறைந்துவிடும். அதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. பொது மக்களுக்கு சுயக் கட்டுப்பாடு அவசியம் என முதல்வர் தெரிவித்தார் என்கிறது தினமணியின் செய்தி.

நேற்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்கிறது அச்செய்தி.