செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : சனி, 22 ஜூன் 2019 (09:30 IST)

சுறா மீன் துடுப்பு வர்த்தகத்துக்கு தடை: கனடா அதிரடி!

சுறா மீன் துடுப்புகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு கனடா தடை விதித்துள்ளது. இந்த தடையை விதிக்கும் முதல் ஜி20 நாடு கனடா என்ற பெயரையும் அந்நாடு பெறுகிறது.
 
ஆசிய நாடுகளை தவிர்த்து சுறா துடுப்புகளை மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யும் ஒரு நாடு கனடா. 1994 ஆம் ஆண்டிலிருந்து உள்ளூர் மீன் பிடிப்புகளில் சுறா மீன்களின் துடுப்புகளை எடுப்பது சட்டவிரோதமானதாக்கப்பட்டது.
 
சுறா மீன் துடுப்புகளின் விற்பனை உலகம் முழுவதும் பல சுறா மீன்களின் வகைகள் அழிவதற்கு காரணமாக உள்ளது. விற்கப்படும் துடுப்புகளில் மூன்றில் ஒரு பங்கு பெரும்பாலும் அழிவின் ஆபத்தில் இருக்கும் சுறா மீன்களின் துடுப்புகளே ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த துடுப்புகள் மனிதநேயமற்ற முறையில் எடுக்கப்படுகிறது என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த துடுப்புகள் ஒரு சுறா மீன் உயிரோடு இருக்கும்போதே அதன் உடம்பில் இருந்து வெட்டி எடுக்கப்படும்.
இம்மாதிரி உயிரோடு இருக்கும்போது எடுக்கப்படும் துடுப்புககளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டுக்கும் கனடாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சட்டம் அமைச்சர்கள், பிரசாரகர்கள் என பலரின் பல வருட முயற்சிக்கு பிறகு கொண்டுவரப்பட்டுள்ளது. சுறா மீன்களின் துடுப்பு மிக விலை உயர்ந்த கடல் உணவாக கருதப்படுகிறது. 
 
2018 ஆம் ஆண்டில் கனடாவில் 148,000 கிலோ கிராம் சுறா துடுப்புகள் இறக்குமதி செய்யப்பட்டன. ஒவ்வொரு வருடமும் சுமார் 73 மில்லியன் சுறாக்கள் துடுப்புகளுக்காக கொல்லப்படுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.