1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (10:23 IST)

அண்டார்டிகாவை விட கடுங்குளிரில் உறையும் அமெரிக்கா

அமெரிக்காவின் சில பகுதிகளை கடுங்குளிர் தாக்கி வருகிறது. அண்டார்டிகாவை விட சிகாகோவில் அதிக குளிர் இருக்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 

பொதுவெளியில் இருந்தால் 10 நிமிடங்களில் குளிர்நடுக்கம் ஏற்படக்கூடிய அளவுக்கு அதிக குளிர் நிலவும். ஆழமான சுவாசம் வேண்டாம், வெளியில் நின்று பேச வேண்டாமென அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

-33 டிகிரி செல்சியஸ் கடும்குளிர் காற்று வீசுவது -46 டிகிரி செல்சியஸில் இருப்பதுபோல உணர செய்யும். பல மாநிலங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.