1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (15:25 IST)

உரிமையாளருக்காக 80 நாட்களாக நடுரோட்டில் காத்திருக்கும் நாய்குட்டி

சீனாவில் 80 நாட்களாக தனது உரிமையாளருக்காக தெருவில் காத்திருந்த விசுவாசமிக்க நாய் ஒன்று வலைதள சமூகத்தினரை நெகிழ வைத்துள்ளது.
 
தனது உரிமையாளருக்காக நடுரோட்டில் காத்திருக்கும் அந்த நாயின் புகைப்படம் 1.4 மில்லியன் பேரால் ஆன்லைனில் பார்க்கப்பட்டுள்ளது.
 
அதன் உரிமையாளர் ஆகஸ்டு 21ஆம் தேதி மரணமடைந்தார். அன்றிலிருந்து அந்த நாய் தினமும் நடுரோட்டில் வந்து காத்து கிடக்கிறது.
இந்த நாய் தெரிவில் தன் உரிமையாளருக்காக காத்திருக்கும் வீடியோ நவம்பர் 10ஆம் தேதியன்று படம் பிடித்து சீனாவில் டிவிட்டர், ஃபேஸ்புக்கிற்கு பதிலாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளமான சின வெய்போவில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் நாயின் விசுவாசத்தை கண்டு அனைவரும் நெகிழ்ந்து வருகின்றனர்.
 
"இந்த நாய்குட்டி நடுரோட்டில் நிற்பது அதற்கு பாதுகாப்பில்லை. யாராவது நல்ல மனிதர் அதனை தத்தெடுத்து அதனை ஒரு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுங்கள்" என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

1920களில் ஜப்பானில் ஹசிகோ என்ற நாய் ஒன்று தனது உரிமையாளருக்காக தினம் ரயில் நிலையத்தில் வந்து காத்திருக்கும். உரிமையாளர் மறைந்த பிறகும் 9 ஆண்டுகளாக அந்த நாய் அவருக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தது. ஹசிகோவிற்கு ஜப்பானில் சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.