8,850 கிமீ தூரம் கடற்பாசி பரப்பு: சேட்டிலைட் சொல்லும் செய்தி!
மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து மெக்ஸிகோ வளைகுடா வரை பரந்து மிதந்து கிடக்கும் கடற்பாசி பரப்பே உலகின் மிகப்பெரியது என்று விண்வெளியில் செயற்கைக்கோள்கள் மூலம் திரட்டப்பட்ட தரவுகள் கூறுகின்றன.
அட்லாண்டிக் மற்றும் கரிபியன் கடலில் உள்ள இந்த பாசிப் பரப்பு இதற்கு முன் இருக்காத வகையில் புதிதாக உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இப்பாசி பரப்பு அதிமாக வளர்வதற்கு, காடுகளை அழிப்பதும், உரங்களை பயன்படுத்துவதும்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
கடற்கரைகளில் அதிகளவு கடற்பாசி இருப்பது சுற்றுச்சூழலை பாதிக்கிறது. மேற்கூறப்பட்டுள்ள இந்த கடற்பாசி 8,850 கிலோ மீட்டர் தூரம் பரந்திருக்கிறது. அதன் எடை 20 மில்லியன் டன்கள் ஆகும்.