1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (11:36 IST)

யுக்ரேனில் 4.8 மில்லியன் குழந்தைகள் இடம்பெயர்வு - யுனிசெஃப்

Ukraine
யுக்ரேனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து 6 வாரங்களில் யுக்ரேனிய குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐ.நாவின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் (UNICEF) திங்களன்று தெரிவித்துள்ளது.


யுக்ரேனில் இருந்து திரும்பிய யுனிசெப்பின் அவசரகால திட்ட இயக்குனர் மேனுவல் ஃபோன்டைன், ''யுக்ரேனின் 7.5 மில்லியன் குழந்தைகளில் 4.8 மில்லியன் பேர் மிகக் குறுகிய காலத்தில் இடம்பெயர்ந்திருப்பது, 31 வருட மனிதாபிமானப் பணியில் நடந்ததை பார்க்காத ஒன்று'' என்றார்.

"தங்கள் வீடுகளில் தங்கியிருப்பதாக மதிப்பிடப்பட்ட 3.2 மில்லியன் குழந்தைகளில், ஏறக்குறைய பாதி பேர் போதிய உணவு இல்லாமல் ஆபத்தில் உள்ளனர்" என்று ஃபோன்டைன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்தார். மேலும், ''மேரியுபோல், கெர்சன் போன்ற நகரங்களில் நிலைமை மோசமாக இருக்கலாம்'' என்று அவர் எச்சரித்தார்,

அங்கு தண்ணீர் மற்றும் சுகாதார சேவைகள் இல்லை மற்றும் உணவு மற்றும் மருந்து விநியோகம் தடைபட்டுள்ளது. இதற்கிடையில், யுக்ரேனில் ஐ.நா தூதர் செர்ஜி கிஸ்லிட்சியா, ரஷ்யா 1,21,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளை யுக்ரேனில் இருந்து அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறி, தத்தெடுப்பு நடைமுறைகளை எளிதாக்குவதற்கும் விரைவுபடுத்துவதற்கும் ஒரு மசோதாவைத் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.

அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை "எந்த ஆதாரமும் இல்லை", ஆனால் UNICEF இந்த விஷயத்தை விசாரிக்கும் என்று ஃபோன்டைன் கூறினார்.