ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2019 (15:53 IST)

செப்டம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: சிம்மம்

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:
ராசியில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் -  சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி (வ), கேது - லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
முக்கிய நபர்களின் ஆதரவைப் பெறும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். கணவன், மனைவிக்கிடையே  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம்.

பெண்களுக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும்.

கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது.

அரசியல்துறையினருக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

மகம்:
இந்த மாதம் பணம் பலவழிகளில் தேடிவந்து சேரும். மனதில் தைரியமும் துணிவும் உண்டாகி எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும்.  ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த மருத்துவச்செலவுகள் குறையும்.

பூரம்:
இந்த மாதம் உற்றார்- உறவினர்களிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். கணவன்-மனைவி உறவில் கருத்து வேறுபாடு ஏற்படலாம் என்பதால் அனுசரித்துச்செல்வது நல்லது. திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். புத்திரவழியில் பூரிப்பும், மகிழ்ச்சியும் ஏற்படும்.

உத்திரம் - 1:
இந்த மாதம் கடன்கள் பைசலாகும். கூட்டுத்தொழிலில் அபரிதமான லாபத்தை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்று பணியில் திருப்தியானநிலை ஏற்படும்.

பரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று ஞாயிற்றுக்கிழமையில் வில்வ அர்ச்சனை செய்து வணங்க எல்லா தொல்லைகளும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் நன்றாக நடக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16,
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9