திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2019 (15:51 IST)

செப்டம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: கடகம்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:
குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில்  சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண ருண ஸ்தானத்தில் சனி (வ), கேது - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
புதிய பதவிகளைப் பெறத் துடிக்கும் கடக ராசியினரே, இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். . வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.  அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அரசியல்துறையினருக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். வெற்றிபெற தடைகளை தாண்டி உழைக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள்.

புனர்பூசம் - 4:
இந்த மாதம் புதிய பொருட்சேர்க்கையும், ஆடை ஆபரணமும்  சேரும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். உடல்நலத்தில் சற்று கவனம் எடுத்துக்கொண்டால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க முடியும்.

பூசம்:
இந்த மாதம் புதிய தொழில் தொடங்கவும், பெரிய முதலீடுகளில் விரிவு செய்யவும் ஏதுவான காலமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திருப்தியுடன் செயல்படுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கப்பெறும்.

ஆயில்யம்:
இந்த மாதம் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெறுவதால் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ச்சியடைவார்கள். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும்.  பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.  பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக அமையும்.

பரிகாரம்: அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று 11 முறை வலம் வந்து வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:  திங்கள், வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 12, 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6, 7