1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (15:45 IST)

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: துலாம்

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

 
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  குரு (வ)  - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது -  பாக்கிய ஸ்தானத்தில் புதன்,  ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:
இம்மாதம் 3ம் தேதி புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 7ம் தேதி தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 10ம் தேதி செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சூரியன் பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சுக்கிரன் பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 21ம் தேதி புதன் பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

வீண் அலைசலை சந்திக்கும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள்.  உடல் உழைப்பை அதிகரிக்க செய்யும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். ஆன்மீக யாத்திரைகள் சென்று வருவீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும்.  புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.

குடும்பத்தில் சந்தோஷமான  சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.  வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். சக ஊழியர்களுடன்  சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். மேலிடத்தில்  மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை  ஏற்படாமல் தடுக்கும்.

கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புது ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை.

அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும்.

பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

சித்திரை3, 4 பாதங்கள்:
இந்த மாதம் கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இன்று வம்பு வழக்குகளில் இழுபறியான நிலையே நீடிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும்.

ஸ்வாதி:
இந்த மாதம் உற்பத்தியிலும் விற்பனையிலும் அதிக முயற்சிகளை மேற்கொண்டால் எந்த போட்டி பொறாமைகளையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் உண்டாகும். வெளியூர், வெளிநாடு களிலிருந்தும் ஆர்டர்கள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பும், கூட்டாளிகளின் ஆதரவும் மனமகிழ்ச்சியை உண்டாக்கிவிடும்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள் :
இந்த மாதம் உத்தியோகஸ்தர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும் என்றாலும் வேலைப்பளுவும், பொறுப்புகளும் அதிகரிக்கும். எந்தப் பணி முடிப்பதற்கும் கடின உழைப்புக்களை மேற்கொள்ள நேரிடும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு ஓரளவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.

பரிகாரம்: வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8