ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்

புதன், 31 ஜூலை 2019 (15:34 IST)

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

 
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன்,  ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன்  - களத்திர ஸ்தானத்தில்  குரு (வ)  - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
கிரக மாற்றங்கள்:
இம்மாதம் 3ம் தேதி புதன் பகவான் தனவாக்கு ராசியிலிருந்து தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 7ம் தேதி சப்தம ஸ்தானத்தில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 10ம் தேதி செவ்வாய் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திலிருந்து சுகஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சூரியன் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சுக்கிரன் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 21ம் தேதி புதன் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
 
 
பலன்:
 
செயல்களில் வேகம் கொண்டுள்ள ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண் வாக்குவாதங்கள் அகலும். மனதில் உற்சாகம் ஏற்படும்..  நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது.
 
தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை.
 
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளை கள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். மறைவிடங்கள் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். சோம்பல் அதிகமாகலாம்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.
 
கலைத்துறையினர் கவனமாக பேசுவது நல்லது.  வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம்.
 
அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும்.
 
பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது.
 
மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.
 
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கப்பெறும். கூட்டாளிகள் சாதகமாக செயல்படுவதால் அபிவிருத்தியும் பெருகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவையும் ஏற்றத்தை ஏற்படுத்தும்.
 
ரோகிணி:
இந்த மாதம் சிந்தித்து சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிலும் நற்பலனை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் இருந்த கெடுபிடிகள் குறைந்து நிம்மதியானநிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள்.
 
மிருகசீரீஷம் 1, 2 பாதங்கள்:
இந்த மாதம் உங்கள்  பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்ததில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள்.
 
பரிகாரம்:  வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு மொச்சை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 3, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
இதில் மேலும் படிக்கவும் :