ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2020 (16:08 IST)

அக்டோபர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மீனம்

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

 
கிரக நிலை:
ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய்(வ)  - தைரிய ஸ்தானத்தில்  ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்  - களத்திர  ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில்  புதன்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில்  ஸ்தானத்தில் குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
கிரகமாற்றங்கள்:
08-10-2020 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-10-2020 அன்று மாலை 4.56 மணிக்கு சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-10-2020 அன்று மாலை 6.15 மணிக்கு சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-10-2020 அன்று காலை 8.19 மணிக்கு செவ்வாய் பகவான் ராசிக்கு மாறுகிறார்.
 
பலன்:
பெரியோர்களின் ஆசியுடன் வாழ ஆசைப்படும் மீன ராசியினரே, இந்த மாதம் உங்களுக்கு வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.
 
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.                     
                            
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். 
 
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள்.
 
பெண்களுக்கு உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது.
 
கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். 
 
அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும்.
 
மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.
 
பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம்  வீடு, மனை வாங்கும் யோகம் யாவும் சிறப்பாக அமையும். பூர்வீக சொத்துவழியில் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும்.  கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். சிலர் வெளியூர் சென்று வர நேரிடும்.
 
உத்திரட்டாதி:
இந்த மாதம்  உற்றார்-உறவினர்களின் ஆதரவைப்பெற சில நேரங்களில் அவர்களை மிகவும் அனுசரித்துச்செல்ல வேண்டி இருக்கும். பணவரவுகள் சரளமாக இருப்பதால் கடன்கள் குறையும். கொடுக்கல்-வாங்கலில் லாபம் அமையும். பெரிய தொகையைப் பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. 
 
ரேவதி:
இந்த மாதம்  கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் சற்று அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் சில ஆதாயங்களைப் பெறுவீர்கள். 
 
பரிகாரம்: வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வ சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12