செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2020 (16:01 IST)

அக்டோபர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: தனுசு

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

 
கிரக நிலை:
ராசியில்  குரு, சனி - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில்  ராஹு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன்  -   தொழில்  ஸ்தானத்தில் சூர்யன் -  லாப ஸ்தானத்தில் புதன்(வ)- அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. 
 
கிரகமாற்றங்கள்:
08-10-2020 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-10-2020 அன்று மாலை 4.56 மணிக்கு சூர்ய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-10-2020 அன்று மாலை 6.15 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-10-2020 அன்று காலை 8.19 மணிக்கு செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
பிரச்சினைகளை வித்தியாசமான வகையில் அணுகும் தனுசு ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும்.
 
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
 
தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள். 
 
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.
 
பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்திருப்பது நல்லது.
 
கலைத்துறையினருக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான  சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி  காண்பீர்கள்.
 
அரசியல் துறையினருக்கு காரியங்களில் இருந்த தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு  தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள். 
 
மாணவர்களுக்கு பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
 
மூலம்:
இந்த மாதம்  எதிர்நீச்சல் போட்டாவது நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக  இருந்தாலும் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும்.
 
பூராடம்:
இந்த மாதம் உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுக்கல்-வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற சில இடையூறுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத மேன்மைகள் உண்டாகும்.
 
உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம்  வீடு, மனை வாங்க வேண்டும் என்ற கனவுகளும் நிறைவேறும்.  கணவன்- மனைவி யிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதிலும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. முடிந்தவரை பிறர்விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது.
 
பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனகுழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 31