செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2020 (15:57 IST)

அக்டோபர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: துலாம்

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)
 
கிரக நிலை:
ராசியில் புதன்(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய ஸ்தானத்தில் குரு, சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) -  அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக  ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  
 
கிரகமாற்றங்கள்:
08-10-2020 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-10-2020 அன்று மாலை 4.56 மணிக்கு சூர்ய பகவான் ராசிக்கு மாறுகிறார்.
23-10-2020 அன்று மாலை 6.15 மணிக்கு சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-10-2020 அன்று காலை 8.19 மணிக்கு செவ்வாய் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
பிள்ளைகள் மேல் அதிக பாசம் கொண்டுள்ள துலா ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு  புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது.
 
குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும்.
 
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.
 
உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை அடியோடு மாறும்.
 
பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம்.
 
கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில்  இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். 
 
அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது.  பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.
 
மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.
 
சித்திரை 3, 4 பாதங்கள்: 
இந்த மாதம் தொழில், வியாபார நிலையிலும் நெருக்கடிகள் ஏற்படும்.  பெரிய முதலீடுகளில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளாதிருப்பது நல்லது. திருமண சுபகாரியங் களுக்கான  முயற்சிகளில் தடை தாமதங்களே நிலவும். 
 
சுவாதி:
இந்த மாதம்  முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.  குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச்செலவுகள் ஏற்படும். 
 
விசாகம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம்  கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே கொடுத்த வாக்குறுதிகளைச் சரியான நேரத்தில் காப்பாற்றி அனைவரின் ஆதரவுகளைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர் பார்த்த லாபத்தைப்பெற நிறைய போட்டிகளை சமாளிக்க நேரிடும்.
 
பரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவுத்  திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27,