அக்டோபர் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: சிம்மம்

புதன், 30 செப்டம்பர் 2020 (15:53 IST)

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
 
கிரக நிலை:
ராசியில் சுக்ரன்  - தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய ஸ்தானத்தில்  புதன்(வ) - சுகஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில்  குரு, சனி - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) - தொழில் ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
 
கிரகமாற்றங்கள்:
08-10-2020 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-10-2020 அன்று மாலை 4.56 மணிக்கு சூர்ய பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-10-2020 அன்று மாலை 6.15 மணிக்கு சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-10-2020 அன்று காலை 8.19 மணிக்கு செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
எல்லாவித சிரமங்களையும் சந்தித்தாலும் அதை சகித்துக் கொள்ளும் தன்மையுடைய சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுக்கு உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும்.
 
குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.
 
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். 
 
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம்.
 
பெண்களுக்கு யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை.
 
கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.
 
அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். 
 
மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.
 
மகம்:
இந்த மாதம் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். புத்திரர்களால் மனசஞ்சலங்களும், தேவையற்ற வீண்செலவுகளும் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. 
 
பூரம்:
இந்த மாதம்  முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றி வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பொருளாதாரநிலையில் கடுமையான நெருக்கடிகளைச் சந்திப்பீர்கள். உற்றார்-உறவினர்களிடையே வீண்விரோதங்கள் உண்டாகும். 
 
உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம்  கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். தொழில், வியாபார நிலையில் அதிகமான போட்டிகளால் லாபம் குறையும். கூட்டாளிகளும் சாதகமின்றி செயல்படுவார்கள். 
 
பரிகாரம்: ஸ்ரீருத்திரமூர்த்தியை ஞாயிற்றுக்கிழமையில் வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 3, 28, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
இதில் மேலும் படிக்கவும் :