திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: சனி, 29 டிசம்பர் 2018 (18:21 IST)

ஜனவரி மாத பலன்: மேஷம்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)


கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுகஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், குரு - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், சனி - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் உங்களின் மனக்கவலைகள் மாறிவிடும். நல்லவர்களிள் உதவி உங்கள் மனதை மகிழ்விக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு பேச்சும் மற்றவர்களால் வேதவாக்காக ஏற்றுக்கொள்பப்படும். ஆன்மீக உணர்வுடன் செய்த நற்செயல்கள் தகுந்த பலனைத்தரும். வீடு மனை வாகன வகைகள் புதியவை வாங்கவும் இருப்பவற்றை சீர்திருத்தம் செய்யவும் நல்வாய்ப்புகள் வந்து சேரும்.

அரசு ஊழியர்கள் பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகும் நிலைகள் உருவாகும். தனியார் ஊழியர்கள் தெய்வபலத்தை நம்புங்கள். பொருளாதாரம் சரளமாக கிடைக்கும். இருக்கும் புகழை தக்க வைக்க நேரம் சரியாக இருக்கும்.

தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் சிறிது சுணக்கமான நிலை அடைவார்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெற்று முன்னேறுவர். பொருளாதார வரவுகள் சமச்சீராக இருக்கும். நற்செயலுக்கேற்ப புகழ் கிடைக்கும்.

பெண்கள் சக ஊழியர்களின் மறைமுக நெருக்கடிக்கு உள்ளாவார்கள். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு குறைவாக இருக்கும். தைரியமான குணங்களுடன் பணி செய்வதால் மட்டுமே இருக்கும் வேலையில் இடர்களை எதிர்கொள்ள முடியும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். உங்கள் தொண்டர்கள்  உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளியுங்கள். எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும்.  திட்டமிட்டு எதையும் செய்யுங்கள்.

கலைத்துறையினர் சிறந்த நிலைக்கு வரலாம். வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். 

மாணவர்கள் படிப்பினில் சிறப்பான பலனைக் காணலாம். இந்த கல்வி ஆண்டில் நீங்கள் விரும்பிய பாடம் உங்களுக்குக் கிடைக்கும். அதிக உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் படிப்பில் சாதனைகள் புரியலாம்.

அஸ்வினி:
இந்த மாதம் உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன்தரும். பணவரத்து திருப்தி தரும். பக்தியில் நாட்டம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும்.  உதவிகளை செய்து மன திருப்தி அடைவீர்கள்.  கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும்.

பரணி:
இந்த மாதம் மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும்.  பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில்  இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  சரக்குகளை  பாதுகாப்பாக வைப்பது நல்லது. 

கார்த்திகை:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு  அதிகரிக்கும்.   எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள்  உங்கள் சொல்படி நடப்பது  மனதுக்கு  மகிழ்ச்சி தரும்.

பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 4, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24