வெள்ளி, 7 மார்ச் 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 மார்ச் 2025 (18:49 IST)

கள்ளக்குறிச்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா.. குவிந்த பக்தர்கள்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டு நெமிலி கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா சிறப்பாக நடைபெற்றது.
 
அங்காளம்மன் அலங்கரிக்கப்பட்டு சிங்க வாகனத்தில் மயானம் நோக்கி புறப்பட்ட போது, ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். மயானத்தில் ஆடு, கோழி பலியிடப்பட்டு, பிரசாதமாக சுண்டல், கொழுக்கட்டை வழங்கப்பட்டது.
 
நூற்றுக்கணக்கான புதுமண பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் குழந்தை வரம் வேண்டி வழிபட்டனர். கோவில் பூசாரி அவர்களுக்கு எலுமிச்சை பழம் மற்றும் அங்காளம்மனுக்கு படையலிடப்பட்ட ரத்த சோறு வழங்கினார்.
 
குழந்தை பெற்ற பெண்கள், குழந்தையை சூறை விட்டு, அம்மனுக்கு நன்றி தெரிவித்து காணிக்கை செலுத்தினர். முன்னோர்களுக்கு விருப்ப உணவுகள், குவாட்டர் பாட்டில், சிகரெட் உள்ளிட்டவைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
 
விழாவை முன்னிட்டு 10,000 பேருக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
 
Edited by Mahendran