1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2019 (15:56 IST)

செப்டம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: துலாம்

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:
ராசியில்  சந்திரன் - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி (வ), கேது - தொழில் ஸ்தானத்தில்   ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
எதிர்பார்த்த லாபத்தைப் பெறும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். . பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள்

குடும்பத்தில் பணவரத்து அதிகப்படும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். வீண் அலைச்சல் ஏற்படலாம். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை  குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம்.

பெண்களுக்கு கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு இருந்த பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக  எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.

அரசியல்துறையினருக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.

மாணவர்கள் மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும். விருப்பங்கள்  கைகூடும்.

உத்திரம் - 2, 3, 4:
இந்த மாதம் செல்வம், செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடிவரும். மாணவர்கள் திறம்பட செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலைக் குறைத்துக்கொள்ள முடியும்.

ஹஸ்தம்:
இந்த மாதம் எதிலும் சற்று ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக்குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது.

சித்திரை - 1, 2:
இந்த மாதம் தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பணம் கொடுக்கல் -வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடையமுடியும்.

பரிகாரம்: புதன்கிழமையில் அருகில் இருக்கும் காவல்தெய்வத்தை வணங்க மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11