ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2020 (04:00 IST)

இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 03/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

1. மேஷம்:
 
மேஷ ராசியினருக்கு இன்று வேலை செய்பவர்களுக்கு நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவர். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலைத்தேடுபவர்களுக்கு இன்று எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்புகள் தேடி வரும்.
 
2. ரிஷபம்:
 
ரிஷப ராசியினருக்கு இன்று திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்கு ஆராய்ந்து பிறகு முடிவு எடுப்பது நல்லது. தொழிலதிபர்கள் நிதானமாக  செயல்படுவது அவசியம்.
 
3. கன்னி:
 
கன்னி ராசியினருக்கு இன்று பண நடமாட்டம் இருக்கும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறும் வாய்ப்புகள் உண்டு. சென்ற இடங்களில் மதிப்பு மரியாதை மற்றும் செல்வாக்கு இருக்கும். குடும்பத்தில் நிம்மதி கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
 
4. துலாம்:
 
துலாம் ராசியினருக்கு இன்று பொதுவாக நற்பலன்களோடு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை  சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
 
5. கும்பம்:
 
கும்ப ராசியினருக்கு இன்று எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் சச்சரவுகளை நீக்கலாம். ஆசையைக் குறைத்துக் கொண்டு அன்றாடப் பணிகளை சரிவர செய்து வந்தாலே போதும். தாம்பத்தியத்தில் சிக்கல்கள் தீரும்.
 
6. மீனம்:
 
மீன ராசியினருக்கு இன்று அகலக்கால் வைத்தால் அவதி நிச்சயம். ஆனாலும் தேவைக்கேற்ற பணவரவு உங்களை வந்து சேரும். எதிர்காலத்திற்குத் தேவையான  பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். பகைவர்கள் உங்களுக்கு பணியக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும்.