ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2020 (04:30 IST)

இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 03/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
 
1. மிதுனம்:
 
மிதுன ராசியினர் இன்று பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்றுசேர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். குடும்பத் தேவைகள்  பூர்த்தியாகும். மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் கிடைக்கும். சோதனைகள் இருந்தாலும் வெற்றி கிடைக்கும்.
 
2. கடகம்:
 
கடக ராசியினருக்கு இன்று சில காரியங்கள் கைகூடும். வெளி இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு படிப்பில் கவனம் ஏற்படும். பெற்றோர்கள்,  பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக்கொடுப்பார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும்.
 
3. சிம்மம்:
 
சிம்ம ராசியினருக்கு இன்று கல்வியில் புதிய மாற்றம் உண்டாகும். அரசாங்க ரீதியில் நன்மைகள் கிடைக்கும். வண்டியில் செல்லும்போது கவனமாக இருப்பது  நல்லது. செய்யும் வேலையில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம்.
 
4. விருச்சிகம்:
 
விருச்சிக ராசியினருக்கு இன்று தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால்  தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிடாமல் இருப்பது பகைவர்கள் பணிந்து போகும் வாய்ப்புகள் உண்டு. 
 
5. தனுசு:
 
தனுசு ராசியினருக்கு இன்று நண்பர்களுடன் மனக்கஷ்டம் வரும். யாரையும் நம்பி சாட்சி கையெழுத்து போடவேண்டாம். வியாபார இடத்தில் பிரச்னைகள் வரக்கூடும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாளாக அமையும்.
 
6. மகரம்:
 
மகர ராசியினருக்கு இன்று பொதுவாக அன்றாடப் பணிகளை கவனமுடன் செய்து, பெரியோர் சொல் கேட்டு நடந்துக்கொண்டால் தொல்லைகளைத் தவிர்க்க  முடியும். பலவித இன்னல்களை உங்கள் புத்தி சாதுர்யத்தால் சமாளிக்கக்கூடும்.