வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (04:00 IST)

இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 08/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

1. மேஷம்:
 
இன்று மேஷ ராசிகாரர்களுக்கு குடும்பத்தில் இதமான சூழ்நிலை யும், பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.
 
2. மிதுனம்:
 
இன்று மிதுன ராசிகாரர்களுக்கு உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பண வரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.
 
3. கடகம்:
 
இன்று கடக ராசிகாரர்களுக்கு தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றமும், ஆதரவு இருக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். 
 
4. கன்னி:
 
இன்று கன்னி ராசிகாரர்களுக்கு மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும்.மன அமைதி  உண்டாகும்.
 
5. விருச்சிகம்:
 
இன்று விருச்சிக ராசிகாரர்களுக்கு பணவரத்து இருக்கும். தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபமும், பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் வெற்றி தரும்.
 
6. தனுசு:
 
இன்று தனுசு ராசிகாரர்களுக்கு அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை காணப்படும்.
 
7. மகரம்:
 
இன்று மகர ராசிகாரர்களுக்கு துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள். காரிய தடைகள் நீங்கும்.
 
8. கும்பம்:
 
இன்று கும்ப ராசிகாரர்களுக்கு மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.