வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. கட்டுரைகள்
Written By Sasikala

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தீர்வு...!!

பலருக்கும் சீரற்ற மாதவிடாய் பிரச்சினை இருக்கிறது. மாதவிலக்கு சீரற்ற முறையில் உள்ளது. இதுவேபல் பெண்களின் பிரச்சனையாக உள்ளது. சிலரோ மாதவிடாய் சமயத்தில் தாங்க முடியாத வலி என்கின்றனர். 
மாதவிலக்கு சமயத்தை தவிர்த்து மற்ற நாட்களில் செங்காயான பப்பாளி ஜூஸ் தினமும் ஒரு டம்ளர் அளவு குடிக்கவும். இவை கர்ப்பப்பையை சுத்தம் செய்வதோடு பிரச்சினையையும் சரியாக்கும்.
 
நாம் பாரம்பரையாக குடித்து வந்த மஞ்சள் பால் வைத்தியம் ஒரு நல்ல தீர்வு. இளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள், கருப்பட்டி கலந்து 2 மாதங்கள் தொடர்ந்து இரவில் குடித்து வந்தால் சீரற்ற மாதவிலக்கு பிரச்சனை சரியாகும்.
 
கற்றாழையைத் தோல் நீக்கி, சதைப் பகுதியை எடுத்து நன்கு அலசி கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட 100% மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும். காரணம் தெரியாத மாதவிலக்கு பிரச்சினைகளும் சரியாகும்.
 
ஒரு இன்ச் இஞ்சியை துருவிக் கொள்ளவும். ஒரு டம்ளர் நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். சிறிது இந்துப்பு அல்லது நாட்டு சர்க்கரை போட்டு குடிக்கலாம். 8-10 வாரங்களிலேயே சீரற்ற மாதவிடாய் சரியாகும்.
 
2 டீஸ்பூன் சீரகத்தை 2 கிளாஸ் வெந்நீரில் போட்டு இரவில் ஊற விடவும். மறுநாள் காலை அதை அப்படியே வெறும் வயிற்றில் சீரகத்துடன்  நீரையும் குடிக்கவும். மாதவிடாய் சீராகும்
 
ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் வெந்தயம் போட்டு ஊற வையுங்கள். மறுநாள் காலை, வெந்தயத்துடன் சேர்த்து நீரையும் குடிக்க வேண்டும்.  மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும்.