புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

செல்போன் கதிர்களால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா...?

இருட்டில் செல்போன் திரை பார்ப்பதால் கண்களில் கருவிழியான கார்னியா பாதிப்படையும். தோலின் மேற்பகுதியான எபிடெர்மிஸ் பகுதியை இந்த கதிர்கள் நாள்பட பாதிப்பதால் தோலின் அதீத வெப்பத்தைத் தாங்கும் திறன் குறையும். மேலும் இதனால் சருமத்தில் வறட்சி ஏற்பட்டு,  ரேஷஷ் தோன்றலாம்.
அதிக நேரம் மொபைலில் பேசும்போது, அதிலிருந்து வெளிவரும் ரேடியேஷன், அதிகச்சூட்டை உண்டாக்கும். அது, மூளை, காது, இதயம்  போன்றவற்றையும் பாதிக்கும்.
 
எவ்வளவு நேரம் ஒருவர் அலைபேசி உபயோகிக்கிறார் என்பதைப் பொறுத்து ரேடியேஷனுடைய வீரியம் இருக்கும். செல்போன் மாடலைப்  பொறுத்து, ரேடியேஷன் வெளிப்பாடு மாறுபடும். எனவே, அதிக ரேடியேஷனை வெளிப்படுத்தாத மொபைல் மாடலை உபயோகப்படுத்துவது சிறந்தது. விலை அதிகமான செல்போன்களில் ரெடியேஷன் மிகக் குறைவாக இருக்கும்.
 
சுத்தமில்லாத கையால் செல்போனை உபயோகித்தால், கைகளின் மூலம் பாதிப்பு செல்போனுக்குப் பரவி, காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். மிக முக்கியமாக, தோல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுத்தும்.
 
அழைப்பின்போது மொபைல்போனுக்கும் உங்களுக்கும் எவ்வளவு தொலைவு உள்ளது என்பது முக்கியம். உதாரணமாக, ஸ்பீக்கரில் போட்டுப்  பேசும்போதும், ஹெட்செட் போட்டு பேசும்போதும் ஏற்படும் பாதிப்பு, காதுக்கு அருகில் மொபைலைவைத்துப் பேசும் பாதிப்பைவிடவும் குறைவு. எனவே மொபைலில் பேசும்போது ஹெட்செட், ஸ்பீக்கர் ஆகியவற்றைப் பயன்படுத்துவது நல்லது.