ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (17:28 IST)

வெள்ளை நிற உடையில் விஜயகாந்த் செல்பி - வைரல் புகைப்படம்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் செல்பி எடுக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக படு தோல்வி அடைந்தது. அதன் பின் விஜயகாந்தின் உடல் நிலையும் சரியில்லாமல் போனது. எனவே, அவரின் அரசியல் நடவடிக்கைகள் முடங்கிப் போனது. ஆனாலும், பல்வேறு முக்கிய பிரச்சனைகளுக்கு அவர் தனது கருத்துகளை மட்டும் தெரிவித்து வந்தார்.
 
மேலும், ஜெ.வின் மறைவிற்கு பின் தமிழக அரசியலில் வெற்றிடம் ஒன்றும் உருவாகவில்லை. விஜயகாந்த் இல்லாமல் போனால்தான் அது வெற்றிடம் என அதிரடி பேட்டியும் கொடுத்தார்.


 

 
இந்நிலையில், அவர் தனது அலுவலகத்தில், வெள்ளை நிற சட்டை மற்றும் பேண்ட் மற்றும் கூலீங் கிளாசுடன் செல்பி எடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.