1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: சனி, 24 ஜூன் 2017 (06:00 IST)

ரஜினிக்கு கொம்புசீவி முடங்க வைத்துவிடுவார் திருமாவளவன். திமுக குற்றச்சாட்டு

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அரசியலில் ஈடுபட சொல்லி உசுப்பி விட்டு பின்னர் அவரை முடங்க வைத்ததை போல ரஜினியையும் முடங்க வைக்க திருமாவளவன் போன்றவர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களிடம் ரஜினி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தி.மு.க வர்த்தக அணிச் செயலாளர் காசி முத்துமாணிக்கம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.



 


ரஜினி அரசியலுக்கு வருவதை திமுக எந்தவிதத்திலும் எதிர்க்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் கருணாநிதி, ஜெயலலிதா இடத்தை ரஜினி நிரப்புவார்’ எனத் திருமாவளவன் சொல்வதை, கட்சி சாராத நடுநிலையாளர்கள்கூட ஏற்க மாட்டார்கள். இப்படி கொம்பு சீவி விட்டுத்தான், விஜயகாந்த்தை டெபாசிட் இழந்து வீட்டில் முடங்க வைத்துவிட்டார்கள். எனவே, ரஜினி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது என்று கூறியுள்ளார்

ரஜினி திருமாவளவன் போன்றவர்களின் ஆலோசனையை கேட்டாலும் அவரும் ஒரு ஜாதிக்கட்சி தலைவர் தான் என்பதை ரஜினி உணராமல் இல்லை. எனவே ரஜினி கட்சி ஆரம்பித்தால் ஜால்ரா போடும் திருமாவளவனை ஒருபோதும் கூட்டணியில் சேர்க்க மாட்டார் ரஜினி என்று ரஜினி ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.