தொடர்புடைய செய்திகள்
- சேலம் இல்லனா பாண்டிச்சேரி!.. விஜய் போட்ட பக்கா ஸ்கெட்ச்!.. செம ரோட் ஷோ இருக்காம்!..
- கண்டுகொள்ளாத பாஜக!.. கடுப்பில் செங்கோட்டையன்!. தவெகவில் இணைவதன் பின்னணி!...
- ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...
- ஆதவ், புஸ்ஸி ஆனந்திடம் சராமரி கேள்விகள்!.. 10 மணி நேரம் சிபிஐ அலுவலகத்தில் நடந்தது என்ன?..
- ஒரு மாதத்தில் இணைப்பு நடக்காவிட்டால் புதிய கட்சி.. ஓபிஎஸ் ஆதரவாளர் அதிரடி..!
விஜய் தலைமையில் மெகா கூட்டணி!.. தவெக போறதே இதுக்குதான்!.. செங்கோட்டையன் போடும் ஸ்கெட்ச்!...
sengottaiyan
50 வருடங்களுக்கு மேல் அதிமுகவில் இருந்தவர் செங்கோட்டையன். எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் பலமுறை எம்எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட சீனியரைத்தான் எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்.
அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும். பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் பேசியதை எடப்பாடி பழனிச்சாமி ரசிக்கவில்லை. எனவே முதலில் செங்கோட்டையனின் பதவியை பறித்தார். ஆனால் ஒரு விழாவில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை செங்கோடையன் சந்தித்து பேசியது பழனிச்சாமிக்கு கோபத்தை ஏற்படுத்தவே செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்கிவிட்டார்.
ஒருபக்கம் அதிமுகவை ஒன்றிணைத்து அதை வலுப்படுத்த சொன்னதே பாஜக தலைமைதான் என செய்தியாளர்களிடம் வெளிப்படையாக செங்கோட்டையன் சொன்னார். இது உண்மையாக இருந்தாலும் செய்தியாளிடம் வெளிப்படையாக செங்கோட்டையன் சொன்னதை பாஜக ரசிக்கவில்லை.
ops ttv
பாஜக தன்னை கைவிட்டு விட்டதால் விஜய் தலைமையில் டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியவற்றை இணைத்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கும் எண்ணமும் செங்கோட்டையனுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் விஜயின் தலைமையை டிடிவி தினகரன் ஏற்றுக்கொண்டாலும் ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் ஏற்றுக் கொள்வார்களா என்பது தெரியவில்லை
.
செங்கோட்டையன் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும் என்கிறது அரசியல் வட்டாரம்.
ஒருபக்கம், செங்கோடையனின் மூவை பார்த்து ஷாக்கான பாஜக தரப்பு அவரை சமாதானப்படுத்தும் வேலையிலும் இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
