புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022
  3. தேர்தல் அலசல்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 5 பிப்ரவரி 2022 (08:02 IST)

காணொலியில் பரப்புரை - ஸ்டாலினின் ஸெட்யுல் இதுதான்!!

தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக முக ஸ்டாலின் காணொலியில் பரப்புரை மேற்கொள்வது உறுதியாகி உள்ளது. 

 
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது என்பதும் நேற்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
மேலும் வேட்புமனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனை செய்யப்பட்டு முறைப்படி இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். 7 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் களத்தில் இருக்கும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். 
 
இந்நிலையில் கொரோனா பரவலும் அதிகரித்து இருக்கும் நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியது. 
 
இதனிடையே தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக காணொலியில் பரப்புரை மேற்கொள்வது உறுதியாகி உள்ளது. அதன்படி பிப்.6-ம் தேதி முதல் காணொலியில் பரப்புரை மேற்கொள்கிறார். நாளை மறுநாள் கோவையிலும், பிப்.7 - சேலம், பிப். 8 கடலூர், பிப்.9 - தூத்துக்குடி, பிப்.10 - ஈரோடு, பிப். 11 -குமரி, பிப். 12 திருப்பூரில் முதல்வர் பரப்புரை மேற்கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.