திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (21:55 IST)

23 ஆண்டுகளாக கருணாநிதியின் நிழலாக இருந்தவன் நான்: வைகோ பேட்டி!!

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துள்ளார்.


 
 
அதிமுக அணிகள் இணைப்பால் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில் திமுக தலைவர் கருணாநிதியை இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசியுள்ளார்.
 
மேலும், திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் கடந்த 8 மாதங்களாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அரசியல் பற்றி பேசாமல் கருணாநிதியின் உடல் நலனை குறித்து விசாரிக்க வைகோ கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று வந்துள்ளார்.
 
இது குறித்து பேசிய வைகோ, என்னை அரசியலில் வளர்த்து விட்டவர் கலைஞர். நான் கல்லூரியில் படிக்கும் போது 53 ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதியை முதலில் சந்தித்தேன். 23 ஆண்டுகளாக அவரது நிழலாக நான் இருந்துள்ளேன். கருணாநிதி நல்ல நினைவாற்றலுடன் இருக்கிறார். விரைவில் திராவிட கட்சியில் கருணாநிதியின் குரல் ஒளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
மேலும், அடுத்த மாதம் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள முரசொலி பவளவிழாவில் வைகோ பங்கேற்க உள்ளார் என தெரிகிறது. எலியும், பூணையுமாக இருந்த திமுக, மதிமுக உறவில் தற்போது சுமூகமான நிலை நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.