1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2017 (11:00 IST)

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கருணாநிதி....

இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக கருணாநிதி சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறார்.


 

 
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் பூரண ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை 6.45 மணியளவில் திடீரென மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கருணாநிதிக்கு தொண்டையில் வைக்கப்பட்டுள்ள PEG என்ற குழாயை மாற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று மாலையே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் கூறப்பட்டது. அதேபோல், கருணாநிதியின் உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் திமுக தொண்டர்கள் இதனால் பதட்டமடைய வேண்டாம் என்றும் திமுக தலைமை கேட்டுக்கொண்டது.
 
இந்நிலையில், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை முடிந்துவிட்டது தெரியவந்துள்ளது. அதாவது, உணவு செலுத்துவதற்காக அவரது தொண்டையில் செலுத்தப்பட்ட பழைய குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதைத் தொடர்ந்து அவர் தற்போது கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார்.. அவர் பூரண நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.