சசிகலா பாவம் செய்தவர்: டிடிவி தினகரன்
பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா நேற்று இரவு ஐந்து நாட்கள் பரோல் பெற்று சென்னைக்கு வந்திருக்கும் நிலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அதிரடியாக பேட்டியளித்தார்.
அதில் சசிகலாவை பாவி என்று கூறுகின்றனர். ஆம், அவர் எடப்பாடியை பதவியில் உட்கார வைத்த பாவிதான். அந்த ஒரே ஒரு பாவத்தை தவிர வேறு எந்த பாவத்தையும் செய்யாதவர்.
சசிகலா போயஸ் கார்டன் இல்லத்தில் கூட தங்கலாம் என்று சிறை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.. ஆனால் தமிழக அரசு அவருக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.
சசிகலாவை சந்திக்க பல எம்.எல்.ஏக்கள் விரும்புகின்றனர். இதை அவர்களே என்னிடம் போன் மூலம் தெரிவித்தனர். அவர்கள் பெயரை இப்போது சொல்ல முடியாது. ஆனால் அதே நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் அவர்கள் அனைவரும் முதல்வருக்கு எதிராக வாக்களிப்பார்கள். திறமையில்லாத இந்த ஆட்சி விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும்' என்று கூறினார்.