பார்லர் போகாமலே முகத்தை பளபளப்பாக்க இயற்கை அழகு குறிப்புகள் !!

Beauty Tips
Sasikala|
நம்முடைய வீட்டிலேயே எளிமையாக, நம்முடைய சமையலறையில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்தே, நாமே செய்து கொள்ள முடியும். 

முகத்தில் இருக்கும் நுண்கிருமிகள் மற்றும் மாசுக்களை நீக்க அடிக்கடி முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும். முகத்தை கழுவுகிறேன் என்ற பெயரில் அடிக்கடி சோப்பு பயன்படுத்துவது தேவையற்றது. 
 
சோப்பு அடிக்கடி பயன்படுத்தினால் அதில் இருக்கும் கெமிக்கல் முகம் வறட்சி அடைய செய்யும். முகத்தை கிளன்சிங் செய்ய ரோஸ்வாட்டர் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
பன்னீர் ரோஜாக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட சுத்தமான ரோஸ் வாட்டரை காட்டன் பஞ்சு கொண்டு முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முகம்  வறட்சியில் இருந்து நீங்கி மென்மையாக இருக்கும்.
 
காபி பவுடரை சிறிதளவு தண்ணீர் கலந்து முகத்தை நன்கு தேய்க்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் நுண்கிருமிகள் மடிந்து முகம் மாசற்று காணப்படும்.  முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவுவது நல்லது. 
 
முகம் எப்போதும் பிரஷ்ஷாக இருக்க, வெள்ளரி சாறு மற்றும் தக்காளி சாறு இவற்றை சரிவிகிதத்தில் கலந்து முகத்தில் 10 நிமிடம் தடவி ஊறவைக்க வேண்டும்.  பின் சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவினால் போதும் முகம் மென்மையாக புத்துணர்வுடன் மாறிவிடும். 
 
முகத்தை க்ளென்சிங் செய்வதற்கு இரண்டு ஸ்பூன் தேனுடன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அதை காட்டன் கொண்டு முகத்தில் தடவி பின் துடைத்து எடுத்தால் போதும். முகத்தில் இருக்கும் அழுக்குகள் போன்றவை நீங்கி முகம் சுத்தமடையும்.


இதில் மேலும் படிக்கவும் :