தேதி தேர்ந்தெடு


மேஷம்
கிரகநிலை: சுகஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோகஸ்தானத்தில் சந்திரன் - சப்தமஸ்தானத்தில் செவ்வாய், குரு - அஷ்டமஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன், சனி - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று நல்லவர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்படும். முடிந்தவரை அடுத்தவருக்கு உதவி செய்யும் முன் நண்பர்களுடன் கலந்தாலோசிக்கவும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும். நீங்கள் திட்டமிட்டு செய்த காரியங்கள் இனி மெல்ல நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1,2
ராசி பலன்கள்

ரிஷபம்
கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், குரு - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நினைத்தபடி பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6
ராசி பலன்கள்

மிதுனம்
மிதுனம் கிரகநிலை: தனவாக்கு ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், குரு - ரணருண ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன், சனி - அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும். வேலையினால் ஏற்பட்ட சோர்வும், மனஅழுத்தமும் குறையும். அடுத்தவரிடம் பேசும் போதும் கருத்து தெரிவிக்கும் போதும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6
ராசி பலன்கள்

கடகம்
கிரகநிலை: ராசியில் ராகு - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன், சனி - சப்தம ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மனதடுமாற்றம் உண்டாகலாம். செலவு கூடும். நீண்ட நாட்களாக சந்தாணபாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பர். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் பறிகொடுத்த பொருட்கள் மீண்டும் திரும்ப உங்களிடமே வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9
ராசி பலன்கள்

சிம்மம்
கிரகநிலை: தனவாக்கு ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன், சனி - ரண ருண ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள தகுந்த சூழ்நிலை வந்து சேரும். நீங்கள் இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும். சில வேண்டாத பிரச்சனைகள் உங்களைத் தேடி வரலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3
ராசி பலன்கள்

கன்னி
கிரகநிலை: ராசியில் சந்திரன் - தனவாக்கு ஸ்தானத்தில் செவ்வாய், குரு - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன், சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று நல்ல முன்னேற்றம் காணலாம். நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும். வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள். நீங்கள் முயற்சி எடுத்து செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். நல்ல காலமாக இது அமையும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6
ராசி பலன்கள்

துலாம்
கிரகநிலை: ராசியில் செவ்வாய், குரு - தனவாக்கு ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன், சனி - சுக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உடல் ஆரோக்கியம் பெறும். மனக்கவலை நீங்கும். எல்லாவகையிலும் லாபம் கிடைக்கும். வாக்கு வன்மையால் எதுவும் சாதகமாக நடக்கும். நல்ல சிந்தனை உண்டாகும். அறிவுதிறன் அதிகரிக்கும். சில நேரங்களில் மற்றவர்கள் பேசுவதை தவறாக புரிந்து கொள்ள நேரிடும், மனோதைரியம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6
ராசி பலன்கள்

விருச்சிகம்
ராசியில் சூரியன், சுக்கிரன், சனி - தைரிய ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அய சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், குரு கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும் உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பிரச்சனைகள் இருந்தாலும் அமைதிக்கு குறைவு இருக்காது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7
ராசி பலன்கள்

தனுசு
கிரகநிலை: தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு - விரையஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், சனி கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சிலர் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். பயணம் செய்யும் போது உங்களது உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7
ராசி பலன்கள்

மகரம்
கிரகநிலை: ராசியில் கேது - சப்தம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், குரு - லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், சனி கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உணவு சம்பந்தப்பட தொழில் செய்பவர்கள் சிறப்பான லாபம் அடையலாம். புதிய தொழில் ஆரம்பிப்பவர்களுக்கு உங்களின் குழந்தைகள் பெயரில் தொழில் ஆரம்பித்தால் நல்ல வளர்ச்சியும், அனுகூலமும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5
ராசி பலன்கள்

கும்பம்
கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு - தொழில் ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், சனி - விரைய ஸ்தானத்தில் கேது கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உங்களிடம் வேலை செய்பவர்களிடம் கூடுதல் அன்பு செலுத்தவும். கடன் வாங்கியிருந்தால் சரியான முறையில் திருப்பிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யவும். அரசாங்க ரீதியிலான பிரச்சனைகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5
ராசி பலன்கள்

மீனம்
கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், குரு - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன், சனி - லாப ஸ்தானத்தில் கேது கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மேல் அதிகாரிகள் கூறிய படி காரியங்களை செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக செல்லவும். வீணான பிரச்சனைகளும் மனக்குழப்பங்களும் வேண்டாம். விரும்பிய பதவி உயர்வு, பணிஇடமாற்றம், சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3
ராசி பலன்கள்

சனி பெயர்ச்சி பொதுபலன்கள் (2017-2020)

national news
சனி பெயர்ச்சி பலன்களின் எந்தெந்த ராசிகாரர்களுக்கு என்னென்ன பலன்கள் பெறுகிறார்கள், என்ன ...

சனி பெயர்ச்சி பலன்கள் மீனம் - (2017 - 2020)

national news
எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்யாத மீன ராசிக்காரர்களே, நீங்கள் ...

சனி பெயர்ச்சி பலன்கள் கும்பம் - (2017 - 2020)

national news
எதிலும் வழக்கு போடும் கும்ப ராசிக்காரர்களே நீங்கள் எவருக்கும் அஞ்சாமல் உண்மையைப் ...

சனி பெயர்ச்சி பலன்கள் மகரம் - (2017 - 2020)

national news
மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்யாத மகர இராசி அன்பர்களே, நீங்கள் வானத்தில் கோட்டை ...

க‌ட்டட‌த்‌தி‌ன் தலைவாசல் அமைக்கும் முறை

national news
நம் உடலுக்கு மூளை எவ்வளவு அவசியமான ஒன்றோ, அது போல் ஒரு கட்டடத்திற்கு தலைவாசல் மிகவும் ...