Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒரு முறை உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா? இது சாத்தியமா?

Widgets Magazine

ஒரு முறைதான் உறவில் கர்ப்பமடைவது என்பது சாத்தியமா? இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா? முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.
பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை  உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம்.
 
ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது. இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால்  கர்ப்பமடைய முடியும்.
 
சிலருக்கு முதல் முறையிலேயே கருத்தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ பல முறை  கடந்த பின்பே கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும். எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும்  சம்பந்தம் இல்லை. முதல் உறவிலும் கருத்தரிக்கலாம். பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத்தரிக்கலாம் என்பதே உண்மை.
 
85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு  பல காரணங்கள் உள்ளன.
 
கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம் என்பது மருத்துவர்களின் கருத்தாகும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கண்டங்கத்திரியின் முழுத்தவரமும் இத்தனை மருத்துவ குணம் கொண்டதா...!!

கண்டங்கத்திரி தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும், தரிசு நிலங்கள், திறந்தவெளி ...

news

எந்தவொரு கலப்படமும் இல்லாமல் இனி வீட்டிலே தயாரிக்கலாம் ஹெர்பல் ஷாம்பு!!

முதலில் ஒரு வட்டவடிவிலான ஸ்டீல் பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே ...

news

பல நோய்களுக்கு தீர்வுதரும் அற்புத மூலிகை தொட்டாற்சுருங்கி!!

காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி தொட்ட உடன் தன்னை ...

news

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது நன்மையானதா??

பழங்களில் சிலர் உப்பை தூவி சாப்பிடுவார்கள். அவ்வாறு சாப்பிடுவதால் பழங்களின் சுவை ...

Widgets Magazine Widgets Magazine