உடலில் உள்ள நீர்ச்சத்தை சமஅளவில் வைத்திருக்க உதவுவதுதான் நீர் முத்திரை. இந்த முத்திரையைச் செய்துவந்தால், நீர்ப் பற்றாக்குறை மற்றும் அதிகக் குளிர்ச்சியால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்தும் எளிதில் தப்பிக்க முடியும். பல வருடங்களுக்கு முன் சிக்குன்குனியாவால் வந்த முடக்குவாதம் மற்றும் மூட்டுவலி, மூட்டுகள் வளைதல் போன்ற பிரச்னை இருப்போர், தொடர்ந்து மூன்று மாதங்கள் இந்த முத்திரையைச் செய்துவர, பரிபூரண பலனை உணர முடியும். எவ்வாறு செய்வது? வலது கை:...