வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (10:27 IST)

பூண்டு சாப்பிட்டால் கொரோனா வராதா?! – வதந்திக்கு பதில் அளித்த உலக சுகாதார அமைப்பு!

உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என சில பொய்யான செய்திகளும் பரவி வருகின்றன.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவோ, குணப்படுத்தவோ பல்வேறு முறைகள் இருப்பதாக போலி தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம். அந்த போலி செய்திகள் குறித்த விளக்கங்களையும் அளித்துள்ளது.

சீனாவிலிருந்து வரும் பொருட்கள் மூலம் கொரோனா பரவாது. ஹெர் ட்ரையர் போன்றவற்றை பயன்படுத்தினால் கொரோனா அழியாது. ஆல்கஹால் சேர்க்கப்பட்ட ஹேண்ட்வாஷ் திரவங்களை பயன்படுத்தலாம். பூண்டு சாப்பிடுவதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனால் கொரோனா வராமல் இருக்கும் என்று நிரூபிக்கப்படவில்லை.

நல்லெண்ணெய் தடவினால் கொரோனா பரவாது என்பது பொய். வீட்டு செல்லப்பிராணிகளிடம் இருந்து கொரோனா பரவாது. இருப்பினும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்வது நல்லது மற்றும் நிமோனியா மருந்துகள் கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்றாது என்று பெரும் விளக்கங்களை வெளியிட்டுள்ளனர்.