செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (09:13 IST)

மகளிர் உலகக்கோப்பை டி20 ஃபைனல்: இந்தியாவுடன் மோதும் அணி இதுதான்

மகளிர் உலகக்கோப்பை டி20 ஃபைனல்
மகளிருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டி நடக்க இருந்தது. ஆனால் மழை காரணமாக இந்த போட்டி ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து லீக் போட்டிகளில் தொடர் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய அணி முதன் முதலாக உலக கோப்பை டி20 போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இறுதி போட்டியில் இந்தியா அணியுடன் மோதும் அணி எது என்பதை முடிவு செய்ய இரண்டாவது அரையிறுதி போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. 135 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி விளையாடி வந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் 13 ஓவர்களில் 98 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த அணி 13 ஓவர்களில் 92 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டி நாளை மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த போட்டியில் இந்திய அணி வென்று சாம்பியன் பட்டம் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்