கிரிக்கெட்டில் பெண்கள் பங்கேற்கக் கூடாது - தாலிபான்கள்
சமீபத்தில் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினர். எனவே தாலிபான்கள் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
பழைமை விரும்பிகளான தாலிபான்களால் பெண்கள் , சிறுமிகளின் சுதந்திரம் பாதிக்கப்படக்கூடும் எனத் தகவல் வெளியான நிலையில், தற்போது கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் பெண்கள் விளையாட தாலிபான்கள் தடைவிதித்துள்ளனர்.
மேலும், தாலிபான் அரசின் கலாச்சாரம் ஆணையத்துணைத் தலைவர் அகம்துல்லா வாசிக் இதுகுறித்து பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில்,கிரிக்கெட் உள்ளிட்ட எந்த விளையாட்டுப் போட்டிகளிலும் பெண்கள் விளையாட அனுமதிப்பட மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.