செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 6 ஜூன் 2016 (21:41 IST)

இளம்பெண்ணின் வயிற்றில் ஆணுறை: அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் 26 வயது இளம் பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து ஆணுறை ஒன்றை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.


 
 
கடந்த சில நாட்களாக அந்த பெண்ணுக்கு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. என்ன சாப்பிட்டாலும் வாந்தி வருகிறது. வலிக்கு மருந்து எடுத்தாலும் வலி குறையவில்லை. இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை சந்தித்துள்ளார் அவர்.
 
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றை ஸ்கேன் எடுத்து பார்த்ததில் வயிற்றில் பிளாஸ்டிக் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக்கை அகற்றினர்.
 
வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் பொருள் காண்டம் எனப்படும் ஆணுறை என்பதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சில வாரங்களுக்கு முன்பு தனது ஆண் நண்பருடன் வாய் வழியிலான செக்ஸ் உறவு கொண்டபோது, ஆண் நண்பரின் ஆணுறை தளர்வாக இருந்ததால் எதிர்பாராதவிதமாக அந்த இளம்பெண் ஆணுறையை விழுங்கி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.