ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2024 (18:35 IST)

இனி எழும்பூரில் இருந்து இந்த 2 ரயில்கள் புறப்படாது.. தாம்பரம் தான்..!

Train
சென்னை எழும்பூரிலிருந்து கிளம்பும் 2 முக்கிய விரைவு ரயில்கள் இனி தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: 
 
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்(12667), வரும் 21-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் இரவு 7.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.   மறுமார்க்கத்தில், நாகர்கோவில் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்(12668), வரும் 22-ஆம் தேதி முதல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் அதிகாலை 4.15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும்.
 
அதேபோல, சென்னை எழும்பூர் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ்(20681), வரும் 20-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் இரவு 8.55 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.   மறுமார்க்கத்தில், செங்கோட்டை - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்(20682), வரும் 21-ஆம் தேதி முதல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் அதிகாலை 4.25 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும்
 
.அதேபோல, சென்னை எழும்பூர் - ஜோத்பூர் எக்ஸ்பிரஸ்(22663), வரும் 23-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் பகல் 2.50 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.   ஜோத்பூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்(22664), வரும் 26-ஆம் தேதி முதல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் மாலை 5.10 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும். 
 
சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகளும், பராமரிப்பு பணிகளும் நடைபெறுவதால் மேற்கண்ட தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran