முன்னாள் கணவனுக்கு வாட்ஸ் ஆப் -ல் மெசெஜ் அனுப்பிய பெண்ணுக்கு சிறை தண்டனை: நடந்தது என்ன?
சவுதி அரேபியாவில் முன்னாள் கணவருக்கு மெசேஜ் அனுப்பிய பெண்ணுக்கு, 3 நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு பெண், தன்னுடைய முன்னாள் கணவருக்கு வாட்ஸ் ஆப்-ல் மெசேஜ் அனுப்பியுள்ளார். அந்த மெசேஜில் பல கடுமையான வார்த்தைகளை திட்டியது மட்டுமல்லாமல், இன வெறியைத் தூண்டுவது போலவும் சில வார்த்தைகளை அனுப்பியுள்ளார்.
இதன் பிறகு அந்த பெண்ணின் முன்னாள் கணவர், போலீஸில் புகர் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், அந்த பெண்ணை, போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் அந்த பெண் 5 ஆண்டுகளுக்கு முன்பு, தன் கணவனை விவாகரத்து செய்ததாகவும், தற்போது மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படவே, வாட்ஸ் ஆப்-ல் திட்டி மெசேஜ் அனுப்பியதாகவும் தெரியவந்தது.
இதன் பின்பு, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த பெண்ணிற்கு 3 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் பெண்களுக்கான உரிமைகள் மிகவும் குறைவு. மேலும் சவுதி அரேபியாவைப் போன்ற முஸ்லீம் நாடுகளில் பெண்களுக்கென்று கடுமையான தண்டனை நிறைந்த சட்டங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.