இளம் பெண்களை படம் பிடித்த இளைஞர்களுக்கு கல்லால் அடி கொடுத்த மக்கள் ..
உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் உள்ள சிக்கந்தர்பூர் என்ற பகுதியில் ஒருவர் வீட்டில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வந்த இளம் பெண்கள் அங்கு ஒலித்துக்கொண்டிருந்த பாடலின் இசைக்கு ஏற்ப நடனமாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு கூடியிருந்த சில ஆண்கள் அப்பெண்கள் நடனமாடுவதை செல்போனில் படம் பிடித்தனர். அதனைக் கவனித்த பொதுமக்கள், படம் பிடித்த இளைஞர்களை கல்லால் அடுத்து தாக்குதல் நடத்தினர்.
இதனால் அந்த இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, பிரச்சனையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், மேலும் இதுகுறித்து போலீஸார் சிலரிடம் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.