செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 18 டிசம்பர் 2019 (13:42 IST)

கணவரின் சடலத்தை 10 ஆண்டுகளாக ஃப்ரீசரில் வைத்திருந்த மனைவி..

அமெரிக்காவில் 10 ஆண்டுகளாக கணவரின் உடலை ஃப்ரீசரில் வைத்திருந்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் தேதி அமெரிக்காவின் உட்டா நகரில் 75 வயதான ஜேன் சௌரன் மாதர்ஸ் என்ற பெண்மணி வீட்டில் முன்னாள் ராணுவ அதிகாரிகள் பொதுநல சோதனை ஒன்றிற்காக நுழைந்துள்ளனர். அப்போது ஜேன் மாதர்ஸ் இறந்துகிடந்தது தெரியவந்தது.

பின்பு அவர்கள் மேலும் சோதனை மேற்கொண்டதில், ஜேனின் கணவரான முன்னாள் ராணுவ வீரர் பால் எட்வர்ஸின் உடல் அங்கிருந்த ஃபிரீசரில் அடைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர் உடலுடன் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில் “என் மனைவி என்னை கொலை செய்யவில்லை” என எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில் உள்ள எழுத்துகள் பால் எட்வர்ஸின் கையெழுத்து தான் எனவும், இந்த கடிதம் 2009 ல் எழுதப்பட்டது எனவும் போலீஸார் கண்டுபிடித்தனர்.

ஜேன் இயற்கையான முறையில் தான் இறந்துகிடந்தார் என தெரியவந்துள்ளது. ஜேன் தனது கணவரை கொலை செய்தாரா என விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரி ஜெரேமி ஹான்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.