திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 27 டிசம்பர் 2024 (08:32 IST)

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்: நூலிழையில் உயிர் தப்பிய WHO தலைவர்

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் நூலிழையில் உயிர் தப்பியதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏமன் தலைநகர் சனாவில், இஸ்ரேல் திடீரென வான்வழி தாக்குதல் நடத்தியதில், சனா விமான நிலையத்திற்கு வந்திருந்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் இந்த தாக்குதலில் இருந்து உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏமன் நாட்டின் சனா என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இந்த வான்வழி தாக்குதல் நடந்ததாகவும், இதன் மூலம் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதேபோல், இஸ்ரேல் மருத்துவமனை அருகே பாலஸ்தீனர்களிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது, வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.


Edited by Siva