வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 நவம்பர் 2024 (11:26 IST)

எங்க இருந்து வந்துச்சு.. நொடி பொழுதில் உக்ரைனை தாக்கிய ஏவுகணை! ரஷ்யாவின் ரகசிய ஆயுதம்..?

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் வான் பாதுகாப்பு அமைப்புகளில் சிக்காத ஏவுகணையை கொண்டு உக்ரைனை தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

 

 

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவிகள் செய்து வருகின்றன. சமீபத்தில் நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை கொண்டு ரஷ்யாவை தாக்க உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது.

 

இதனால் போர் மேலும் தீவிரமடையும் என்றும், உக்ரைனுக்கு உதவும் நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ரஷ்யா தற்போது தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உக்ரைன் மீது சோதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

 

நொடிக்கு 3 கி.மீ வேகத்தில் செல்லும் ஒரேஷ்னிக் என்ற இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை, நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளின் ரேடார்களில் கூட மண்ணைத் தூவி விட்டு இலக்கை நொடிப்பொழுதில் தாக்கி அழிக்கக்கூடியது எனக் கூறப்படுகிறது. 

 

இந்த ஏவுகணையை தற்போது உக்ரைனின் இலக்கில் தாக்கி வெற்றிகரமாக சோதித்துள்ளதாக ரஷ்ய அதிபர் வ்ளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ஆனால் ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல் குறித்து உக்ரைன் இதுவரை உறுதி செய்யவில்லை. உலக நாடுகளை அச்சுறுத்த புதின் இவ்வாறு கூறி வருவதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K